तवदासोहं तवदासोहं तवदासोहं तवदासोहं तवदासोहं दाशरथे | |
தவ தாஸோஹம் தாசரதே (தவ தாஸோஹம் )
உனதடிமை நான் உனதடிமை நான்
உனதடிமை நான் தசரதன் மைந்தனே (உனதடிமை நான் )
वरमृदुभाष विरहितदोष
नरवरवेष दाशरथे ||
உயர்மென் மொழியோய் மாசில் மரகதமே
மாந்தருள் மாணிக்கமாய் வந்த தசரதன் மைந்தனே (உனதடிமை நான் )
सरसिजनेत्र परमपवित्र
सुरपतिमित्र दाशरथे ||
தாமரைக்கண்ணா தூய்மையின் பொலிவே
இந்திரன் தோழா தசரதன் மைந்தனே (உனதடிமை நான் )
निन्नुकोरितिरा निरुपमशूर
नन्नेलुकोरा दाशरथे ||
உனை வேண்டுகிறேன் உவமையில் வீரா
எனைக்காத்திடுவாய் தசரதன் மைந்தனே (உனதடிமை நான் )
मनविनि विनुमा मरुवसमयम
इनकुल धनमा दाशरथे ||
என் வேண்டுதல் கேளய்யா மறந்திடும் சமயமிதா
ஆதவன் குல ஒளியே தசரதன் மைந்தனே (உனதடிமை நான் )
घनसमनील मुनिजनपाल
कनकदुकूल दाशरथे ||
கருமுகில் வண்ணா முனிகணத்ராண
பொன்னுடையோய் தசரதன் மைந்தனே (உனதடிமை நான் )
धरनि नीवंटि दैवमु लेदंटि
शरणनु कोंटि दाशरथे ||
மேதினியிலுனைப்போல் தெய்வமுமுண்டோ
சரணடைந்தேனுனை தசரதன் மைந்தனே (உனதடிமை நான் )
आगमविनुत रागविरहित
त्यागराजनुत दाशरथे ||
வேதங்கள் தொழும் ஆசையில் அமுதே
த்யாகராஜன் தொழும் தசரதன் மைந்தனே (உனதடிமை நான் )
No comments:
Post a Comment